மதுரையில் நடக்கவுள்ள தவெகாவின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு அரங்கில் விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த சுமார் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை கிரேனின் உதவியுடன் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ரோப் அறுந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்தது.
அந்த பகுதியிலேயே நின்றிருந்த 20 லட்சம் மதிப்புடைய சொகுசு கார் மீது கொடிக்கம்பம் முழுவதும் விழுந்ததால், கார் முற்றிலும் நொறுங்கி அழிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் இருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் விழிப்புடன் விரைந்து ஓடியதால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் மாநாட்டு ஏற்பாடுகளின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கார் உரிமையாளர் சோகத்தில் கண் கலங்கியபடி நின்றது, அதை பார்த்தவர்கள் யாரும் தாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
“>