மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார்!
Dinamaalai August 21, 2025 01:48 AM

 


 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்   திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாளில் காசி திருமடத்துக்கு காசியில் மிகப்பெரிய கோயில் அமைந்துள்ளது.  இங்கு சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இந்த மடத்தின் 21 வது அதிபராக "கயிலை மாமுனிவ ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் (95). இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972 ல் ஸ்ரீகாசி மடத்தின் அதிபரானார்.

சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாக கருதி  50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை தினமும் பாராயணம் செய்து வந்தார்.300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையும் பெருமையும் மிக்க காசிமட வரலாற்றில் பல்துறை விரிவாக்கம் பெற்று வளா்ச்சி கண்டு பொற்காலத்தை  பாராட்டும் வகையில் மேம்பாடு அடையச் செய்தவா்   


இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வயது மூப்பு காரணமாக  உடல் நலம் குறைபாடு காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சுவாமிகள் திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மகா சமாதி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது நல்லடக்கம் மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் இன்று ஆகஸ்ட் 20ம் தேதி புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.  ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி முக்தி அடைந்தது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.