தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ரஜினி, கமல் என்னும் இரு இமயங்களுக்கு நடுவில் அவர்ளுக்கு இணையான ஆளுமை செய்தவர் விஜயகாந்த். குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயகாந்த் தான். நல்ல உயரம் தமிழ்நாட்டுக்கு உரிய நிறத்துடன் கணீர் வசன உச்சரிப்பு எனக்கு அனைத்தும் தென் மாவட்ட காரர்களின் சாயலில் இருந்ததால் விஜயகாந்தை கொண்டாட ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். விஜயகாந்தின் சண்டை காட்சிகளை பார்க்கவே ரசிர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். அப்படி ஒரிஜினாலிட்டியுடன் எந்தவித டுப்பும் பயன்படுத்தாமல் நடிப்பதில் திறமை வாய்ந்தவர் விஜயகாந்த். அவரிடம் சார் இது கொஞ்சம் ரிஸ்க்கான சண்டை காட்சி இதில் டுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னால் அதற்கு அவர்,” அவரும் ஒரு உயிர் தானே அதனால் நானே இதை செய்கிறேன்” என்று துணிச்சலுடன் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்திக் கொடுப்பார்.
அதுவரை B மற்றும் C சென்டர்களில் வெற்றி நடை போட்ட விஜயகாந்த், ரமணா திரைப்படத்தின் மூலம் A சென்டர்களில் வெற்றி நடை போட்டார். விஜயகாந்தின் கேரியரில் ”ரமணா” பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுறையாக அமைந்தது. அவருக்கு மட்டுமல்ல அதை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் தமிழ் சினிமாவில் பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. ஆனால் இந்த படத்தை விஜயகாந்தின் குடும்பத்தை ஏமாற்றி தான் எடுத்தேன் என்று சமீபத்திய நேர்காணல் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் அதில்,
” விஜயகாந்த் சாரிடம் கதை சொல்ல செல்லும் பொழுது சில கண்டிஷன்கள் போடுவார்கள். அதில் ஒன்று ஹீரோ குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக் கூடாது. மற்றொன்று கிளைமாக்ஸ் இல் ஹீரோ சாகக்கூடாது என்று சொன்னார்கள். நான் இந்த இரண்டு விஷயங்களும் என் படத்தில் வராது. என்று சொல்லிவிட்டு கதை சொல்ல அனுமதி வாங்கி விட்டேன். கதை சொல்லும் பொழுது ஒரு கல்லூரி பேராசிரியர் அவர்களுக்கு நான்கு வெவ்வேறு விதமான குழந்தை என்று சொல்ல ஆரம்பித்தபோது அதை ரசிக்க ஆரம்பித்தார்கள்”.
”ஒரு கட்டத்தில் இவர் இதை எல்லாம் ஏன் செய்கிறார், என்று பிளாஷ்பேக் காட்சியில் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொன்னேன். அதற்கும் அவர்கள் ஏதும் சொல்லவில்லை. கடைசியாக கிளைமேக்ஸ் சொல்லி முடிச்சேன். வீட்டில் உள்ள அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். சாரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த கிளைமேக்ஸ் மட்டும் மாத்தலாமா? என்று கேட்டார்”.
“உடனே விஜயகாந்த் சார் இல்லை இதுதான் படத்தின் கிளைமேக்ஸ் இதுவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். கதை சொல்லி அதன் மூலமாக அவர்களை சம்மதிக்க வைத்து. ஏமாற்றி தான் உள்ளே சென்றேன், ஆனால் என் கதை அவர்களை சம்மதிக்க வைத்து விட்டது. இப்படி தான் ரமணா படம் தொடங்கியது”. என்று கூறியிருந்தார்.