தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) 2-வது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரையில் விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் கொடிக்கம்பங்கள், பேனர்கள், என பதாகைகள் முழுவதுமாக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதை தடுக்கும் வகையில் உள்ள இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும் என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்காக மதுரை காவல் ஆணையர் நேரடியாக நடவடிக்கை எடுத்து, ஒரு மணி நேரத்திற்குள் அனைத்தும் அகற்றப்பட்டதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சற்றே சிக்கலுக்குள்ளானது போல் தெரிகிறது.