இந்திய கிரிக்கெட் அணியில் 18 வயதில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இப்போது ஆளே காணாமல் போய்விட்டார்.
தனது பாதை மாறியதை உணர்ந்து வருந்தும் பிரித்வி ஷா, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்குக் கடைசி நம்பிக்கையாக உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரான Buchi Babu Invitational Tournament நடப்பு சீசனில் (ஆகஸ்ட் 18 - செப்டம்பர் 9) சத்தீஸ்கருக்கு எதிரான முதல் லீக் போட்டியில் பிரித்வி ஷா மகாராஷ்டிரா சார்பில் களமிறங்கிச் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
நேற்று சதமடித்த பிறகுப் பேசிய பிரித்வி ஷா, "மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில் என் வாழ்வில் ஏற்றது தாழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.
என்மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். எதையும் நான் மாற்ற விரும்பவில்லை.
19 வயதின்போது என்ன செய்தேனோ அதைத்தான் செய்கிறேன். ஏனெனில், அதுதான் இந்திய அணியில் நான் இடம்பெற வழிவகுத்தது.
"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வருந்தும் பிரித்விநான் நானாக இருக்க முயற்சி செய்கிறேன். உண்மையில் சமூக ஊடகங்கள் அல்லது வேறு எதிலும் இருக்க முயலவில்லை.
இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் மிகவும் மோசமாக உள்ளன. நான் அதைப் பயன்படுத்தாதபோது அது ஒருவித அமைதியைத் தருகிறது" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, தற்போது இந்திய அணியில் இருக்கும் அவரது தொடக்கக் கால வீரர்கள் சப்போர்ட் செய்கிறார்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த பிரித்வி ஷா, "நான் யாருடைய அனுதாபத்தையும் விரும்பவில்லை. இதை முன்பே நான் பார்த்துவிட்டேன்.
என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னுடன் இருந்த என் நண்பர்கள் இருக்கின்றனர். இது போதும்" என்றார்.
``பிரித்வி ஷாவைப் பாருங்கள்; கிரிக்கெட் உங்களை அழவைக்கும்" - ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் வீரர்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR