கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன?
Seithipunal Tamil August 21, 2025 07:48 AM

தமிழகத்தில் பொது விடுமுறை இல்லாமல் கோவில் திருவிழா, பிரபலங்களின் பிறந்தநாள், நினைவு நாள் உழைத்த நாட்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

"மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (20.08.2025) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2025 செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை (13.09.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.

இருப்பினும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.