மீண்டு வந்த மம்மூட்டி: ரசிகர்ளுக்கு சர்பிரைஸ் கொடுத்த மோகன் லால்; இரட்டை மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Vikatan August 21, 2025 06:48 AM

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது. அதனால் அவர் நடித்து வந்த படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து, நீண்டகாலமாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், அவர் உடல்நலப் பிரச்னையிலிருந்து மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மம்மூட்டியின் நெருங்கிய உதவியாளரான ஜார்ஜ் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``அன்புள்ள மம்மூக்கா, எங்கள் கைகளைப் பிடித்து எங்களை இன்னும் பல ஆண்டுகள் வழிநடத்த வேண்டும். உங்கள் சிறந்த நடிப்பு தருணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

மோகன் லால் - மம்முட்டி

இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நான் நிம்மதியாக உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் மம்மூட்டி நலமுடன் வீடு திரும்பியதை காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், பிரித்விராஜ், மஞ்சுவாரியார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை கொண்டாடியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் மோகன்லாலும் இணைந்துகொண்டது மலையாள திரையுலக ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது. நடிகர் மோகன்லால் அவரின் முகநூல் பக்கத்தில், ஒரே மேடையில் நடிகர் மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

நடிகர் மம்மூட்டியும் நடிகர் மோகன்லாலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இவர்களின் நட்பு திரையுலகில் அரிது. மலையாள சினிமானின் இரட்டைத் தூண்களாக கருதப்படும் இருவரும் திரைக்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.

`இதான்டா சினிமா!' - ஒரே படத்தில் மம்முட்டி, மோகன் லால், ஃபகத் ஃபாசில்; இயக்குநர் யார் தெரியுமா?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.