வால்பாறை அருகே சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த பகுதிகளில் யானைகள் அதிகமாக நடமாடும். இந்த நிலையில் தும்பிக்கை இல்லாத ஒரு குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பாக சாலையை கடந்து அழைத்துச் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பதற்றத்துடன் சாலையை கடந்த தும்பிக்கை இல்லாத குட்டி யானையை பிற யானைகள் அரவணைத்து காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். இதோ அந்த வீடியோ…