தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!
WEBDUNIA TAMIL August 22, 2025 07:48 PM

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது, ரேபிஸ் தொற்று உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நாய்களை கட்டுபடுத்த அவற்றை காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் நாய் பிரியர்கள் போராட்டங்களை நடத்தினர். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை விதித்துள்ளது. மேலும் டெல்லியில் நாய்களுக்கு தடுப்பூசி, கருத்தடை செய்த பிறகு பிடித்த இடங்களிலேயே விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு நாய் நேசர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.