சேலம் மாவட்டத்தில் உள்ள புளியங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலீப் சிங் என்பவர் போர் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கடந்த 16-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திலீப் சிங் திடீரென தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அவரது அலறல் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் திலீப் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி திலீப் சிங் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.