தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் பேசியபோது, “நான் ஒன்றும் வாய்ப்பில்லாமல், ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு வரவில்லை” என்று கூறியது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த பேச்சு மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் குறிப்பதாக கருதப்படுகிறது.
விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் அதற்கு அவர் “விஜய் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு நான் எப்படி பதிலளிக்க முடியும்?” என்று அவர் கூறினார். மேலும், “இருந்தாலும் அவர் என்னுடைய தம்பிதான்” என்று அன்புடன் குறிப்பிட்டு, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கமல்ஹாசனின் இந்த பதிலடி, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த கலைஞரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சிக்காமல், தனது முதிர்ச்சியான பேச்சால் நிலைமையை கையாண்டார். அதே சமயம், அவரது “அட்ரஸ் இல்லாத லெட்டர்” என்ற கருத்து, விஜய்யின் பேச்சில் நேரடியாக எந்தப்பெயரும் குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டி, ஒரு மறைமுகமான விமர்சனத்தையும் முன்வைப்பதாகக் கருதப்படுகிறது.
Edited by Siva