மதுரையின் பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தாக்கம், மாநாட்டு திடலை மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரத்திலும் கூடத் தெரிந்தது. அதற்கு ஓர் உதாரணம் – மாநாட்டுப் பகுதியில் தர்பூசணி விற்பனை செய்த ஒரு வியாபாரி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், “வருங்கால முதல்வர் விஜய்க்காகதான் தள்ளுபடி… வெறும் ₹10-க்கு தர்பூசணி வாங்குங்க… நானும் தவெக காரன்தான்!” என்று அந்த வியாபாரி உற்சாகமாக அழைத்து வியாபாரம் செய்தார். அவரது உரிமைமிகுந்த அழைப்பு மாநாட்டுக்குச் செல்லும் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு பக்கத்தில் அரசியல் உற்சாகம் வீச, மறுபக்கத்தில் வியாபாரத் திறமையும் கலந்து, மக்களிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்திய இந்த தருணம், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் வளர்ந்துவரும் பாசத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது.
“>