அடப்பாவமே…! புது கார் வாங்கிய நபர்… நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!
SeithiSolai Tamil August 22, 2025 02:48 PM

திருப்பத்தூர் மாவட்டம் ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் அண்ணா நகர் பகுதியில் முன்பு புதிய ஆட்டோ பார்க்கிங் வசதியுடன் கூடிய சொகுசு காரை வாங்கினார். கடந்த வாரம் செந்தில் தனது நிறுவனத்தில் காரை நிறுத்தி ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் குறித்து நண்பர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ பார்க்கிங் முறையில் காரை இயக்க முயன்ற போது கார் பாதியில் நின்றது. இதனால் செந்தில் கார் கதவை திறந்து பார்த்தார். அப்போது தானாகவே பின்னோக்கி நகர்ந்து சென்ற காரை செந்தில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது.

அதற்குள் கார் பின்னோக்கி நகர்ந்து கதவு வேகமாக மோதியதால் நிலை தடுமாறி செந்தில் கீழே விழுந்தார். இதனால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது கால்களிலும் டயர்கள் ஏறி இறங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் செந்திலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.