இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் இந்தியாவிற்கு மட்டுமல்ல... இவர் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதராகவும் இருப்பார்.
இந்தப் பதவிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செர்ஜியோ கோர் என்பவரைப் பரிந்துரைத்துள்ளார்.
இவரின் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் வழங்க வேண்டும்.
செர்ஜியோ கோர் ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் நம்பிக்கை பெற்றவர் ஆவார். தற்போது அவர் வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் அலுவலகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
ஒருவேளை, இவர் நியமிக்கப்பட்டால், இவர்தான் ஆசியாவின் இளம் அமெரிக்க தூதராக இருப்பார். இவருக்கு வயது 39 ஆகும்.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?இவரை இந்தியாவின் அமெரிக்க தூதராகப் பரிந்துரைத்தது குறித்து ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு, நான் மிகவும் நம்பக்கூடியவர், எங்களது கொள்கைகளைப் பரப்புபவர், எங்களுக்கு உதவி செய்பவரை நியமிப்பது முக்கியமானது.
அப்படி பார்க்கையில் செர்ஜியோ சிறந்த தூதராக இருப்பார். அவர் எனக்கு சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Trump 50% Tariff: ``அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்'' - இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk