'ஆல்தாஃப் சலீம்' இயக்கத்தில் 'ஓடும் குதிரா சாடும் குதிரா' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.இத்திரைப்படம் ஓணம் பண்டிக்கையொட்டி வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் கல்யாணி நடித்த 'லோகா' திரைப்படமும் அதே நாளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.இதனிடையே,2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்ததாவது" நான் அடுத்ததாக கார்த்தி சார் நடிக்கும் 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் நடிப்பதற்கு 4 மாதங்கள் என்னுடைய நேரம் செலவாகும்.
ஒரே நேரத்தில் 3,4 திரைப்படங்களில் கமிட் ஆக எனக்கு விருப்பமில்லை. ஒரு திரைப்படம் கமிட் ஆனால் அது நடித்து முடித்த பின்பே அடுத்த படத்தில் கமிட் ஆவேன்.
அப்போது தான் என்னுடைய முழு கவனத்தையும் அந்த கதாப்பாத்திரத்திற்கு கொடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.