திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் 18 வயது இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள சிற்றிவரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். 18 வயதான இவர் அப்பகுதியிலுள்ள ஜவுளிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முருகேசன்.
அவர் மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது திடீரென ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் நிலை தடுமாறிய முருகேசனின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்.!! மாணவன் பலி.!!
இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் நாய்களால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் விபத்து சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!