பொதுவாக காய் கறிகள் நம் பசியை மட்டும் குறைக்க படைக்க படவில்லை .அவை நம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் இயற்கை படைத்துள்ளது .இந்த காய் கறிகளில் கத்தரிக்காய் மூலம் கிடைக்கும் பல நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும், கரையக்கூடிய கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது.
2.இந்த கத்தரிக்காயில் உள்ள நார் சத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டது
3.கத்தரிக்காயில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.
4.கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலின் பளபளப்பை மேம்படுத்தி நம் இளமையை அதிகரிக்கும்.
5.கத்திரிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது,
6.இந்த கத்தரிக்காயில் ஆக்சிஜனேற்றம் மூலம் நமது இதய ஆரோக்கியம் மேம்படும்.
7.கத்திரிக்காயில் உள்ள சில பொருட்கள் நமக்கு தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
8.கத்தரிக்காயில் உள்ள சேர்மங்கள் நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் சளி, இருமலைக் குறைக்கும்.
9.மேலும் கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது.