ஈரோடு மாவட்டம் பாரியூர் நஞ்ச கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபேஷ். இவருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்த பிரபு, செந்தில்குமார் ஆகியோர் நெருக்கமாக பழகி உள்ளனர். இருவரும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளனர்.
அங்கு அலுவலக இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட வேலைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பூபேஷ் உள்ளிட்ட 5 பேரிடமிருந்து பல்வேறு தவணைகளாக 49 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளனர். பின்னர் பிரபு போலியான பணி நியமன உத்தரவுகளை தயார் செய்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அதனை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்ற விசாரித்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பூபேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபு, செந்தில் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.