தவெகவின் மதுரை மாநாட்டில் உயிரிழந்த 3 பேருக்கும் கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெகவின் 2-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெயிலை கூட பொருட்படுத்தாமல் காலை முதலே தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்தனர்.
இந்த மாநாட்டில் தொண்டர்களுக்காக குடிநீர் வசதி, பார்கிங் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, கழிவறை வசதி உணவு, 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுக்காப்பு காவலர்கள் உள்ளிட்டவை மிகவும் பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட போதிலும் தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் என்று 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.