உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர்-மும்பை லோக்மான்யா திலக் ரயில் நிலையம் இடையே குஷி நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பி2 குளிர்சாதன பெட்டியில் உள்ள கழிவறைக்கு ஊழியர்கள் சென்றனர்.
அங்கு குப்பைத்தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.