மயிலாடுதுறை, ஆகஸ்ட் 24 : மயிலாடுதுறையில் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததில், அவர்களுக்கு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களால் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் சமீப நாட்களில் நாய்கடியால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் முதல் பெரியவர்கள் பலரையும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்கடித்த சில நாட்களில் அவர்கள் ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.
தெருநாய்களை கட்டுப்படுத்தும் விதமாக, கருத்தடை மேற்கொள்ளவும், கருணைக் கொலை செய்யும், தெருக்களுக்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், தெருநாய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கூட, மயிலாடுதுறையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மயிலாடுதுறையில் 20க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடித்து குதறியுள்ளது. அதாவது, மயிலாதுறை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை, கண்ணாரத் தெரு, கச்சேரி சாலை உள்ள முக்கிய பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருந்துள்ளன.
ஒரே நாளில் 20 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்அப்போது, அவ்வழியாக சென்றவர்களை நாய்கள் துரத்தி துரத்து கடித்து குதறியுள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் கால்களையும் நாய் கடித்து குதறி இருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை படையெடுத்தனர்.
Also Read : மின்னல் தாக்கி அக்காள் தங்கை உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் சோகம்..
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெருநாய்கள் கடியால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிவக்குமார் (42), தனுஸ்ரீ(17), கற்பகம் (62) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து விவரங்களை கேட்டனர். மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் ஆக்ரோஷமான நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read : மீண்டும் அதிர்ச்சி.. நெல்லையில் சிறுமியின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்!
தொடரும் தெருநாய்கள் தொல்லைமுன்னதாக, 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி கூட, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விலை பகுதியில் தெருநாய் கடித்து 7 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளது. அதாவது, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, தெருநாய் ஒன்று சிறுமி துரத்து சென்று அவரது முகத்தில் கடித்து குதறியது. இதில் சிறுமியின் மூக்கு, வாய், தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 1.24 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.