அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற பிரசார பயணத்தை கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கினார். அவர். தனது பயணத்தை மற்ற தலைவர்கள் போல் கார்-ஜீப் போன்ற வாகனங்களில் மேற்கொள்ளாமல் பச்சை நிறம் கொண்ட பஸ்சில் மேற்கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா பாணியில் மக்களை சந்தித்து பேசுகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரசார கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மக்களை கவரும் வகையில் இருப்பதாகவும். அனல் பறப்பதாகவும் அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில், ஏற்கனவே மூன்று கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில், தற்போது 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 1.9.2025 முதல் 13.9.2025 வரை, நான்காம் கட்டமாக கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 1-9-2025 (திங்கள்) - திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 2ம் தேதி மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு,
3ம் தேதி மதுரை மேற்கு, மதுரை மையம், மதுரை தெற்கு, 4ம் தேதி - சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, 5ம் தேதி - கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம், 6ம் தேதி - நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, 7ம் தேதி - ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, 9ம் தேதி - தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 10ம் தேதி - பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, 11ம் தேதி - மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், 12ம் தேதி - திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், 13ம் தேதி - சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.