சிறுதானிய வகைகளில் ஒன்றான வரகரிசியை வைத்து புளியோதரை சாதம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
வரகு அரிசி
காய்ந்த மிளகாய்
புளிக் கரைசல்
வேர்க்கடலை
வெல்லம்
மஞ்சள் தூள்
எள்,மல்லி,வெந்தயம்,பெருங்காயத்தூள்
எண்ணெய்
உப்பு
கடலை பருப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:-
முதலில் வரகரிசியை வேக வைத்து சாதம் செய்து வைத்துக் கொள்ளவும். எள், மல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் இவற்றை வாணலில் எண்ணெய் இல்லாமல் போட்டு வறுத்து போடி செய்துக் கொள்ளவும்.
இதையடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலை போட்டு தாளித்து புளிக் கரைசலை ஊற்றி மஞ்சள் தூள்,உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் புளிகாய்ச்சல் தயார்.
இதனை வடித்து வைத்துள்ள சாதத்தில் போட்டு சுவைக்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி நன்கு கிளறினால் சுவையான வரகு புளியோதரை தயார்.