யூடியூபர் சாஹர் டுடூ (வயது 22). இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.
இந்நிலையில், சாஹர் நேற்று தனது நண்பர்களுடன் ஒடிசா மாநிலத்தின் கோரபுட் மாவட்டத்தில் உள்ள துடூமா அருவிக்கு சென்றுள்ளார். அருவியின் மையப்பகுதிக்கு சென்ற சாஹர் அங்கு இருந்தவாறு டிரோன் கேமரா மூலம் அருவியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்
அப்போது, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியின் மையப்பகுதியில் சாஹர் சிக்கிக்கொண்டார். கரையில் இருந்த அவரது நண்பர்கள் அவரை கயிறு மூலம் மீட்க முயற்சித்தனர். ஆனால், அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாஹரின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. சாஹர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாஹரை தேடும் பணியில் போலீசார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சாஹர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.