தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு கடந்த வியாழன் அன்று மதுரையில் நடந்து முடிந்தது. அன்றைய தினம் ஏராளமான சம்பவங்கள் நடந்து அவை சமூக வலைத்தளத்திலும் வைரலானது. அவ்வகையில் இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தவெக தொண்டர்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து மாநாட்டில் நடந்த பல எதிர்மறையான சம்பவங்கள் பகிரப்பட்டு அது சரி இல்லை இது சரி இல்லை என்று குறை கூறும் நிலையில் இது போன்ற நல்ல செயல்களையும் பகிர்ந்து பாராட்டினால் என்ன? என்பதே தவெக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. இந்த காணொளி வைரலானதை தொடர்ந்து பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by TVK IT Wing (@tamilaga_vettri_kazhagam)