ஆகஸ்ட் 25, 2025 .. இன்று வங்கிகளுக்கு விடுமுறையா?.. நகர வாரியான பட்டியல் இதோ!
TV9 Tamil News August 25, 2025 01:48 PM

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) அட்டவணையின் அடிப்படையில் 2025, ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25, 2025) வங்கிகளுக்கு விடுமுறையா இல்லையா என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று எந்த எந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, எந்த எந்த பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று வங்கிகளுக்கு விடுமுறையா?

இந்தியாவில் உள்ள வங்கிகளின் விடுமுறையை இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானம் செய்கிறது. அரசு விடுமுறை, தேசிய விடுமுறை, உள்ளூர் விடுமுறை ஆகிய நாட்களின்போது வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இது தவிர வார விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25, 2025) சில பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெள்ளத்தில் கார், பைக் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? இன்சூரன்ஸ் நிபுணர்கள் சொல்வது என்ன?

எங்கெல்லாம் இன்று வங்கிகளுக்கு விடுமுறை?

இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையின் படி, இன்று (ஆகஸ்ட் 25, 2025) ஸ்ரீமந்த சங்கர்தேவ் திருபவ் திதியை முன்னிட்டு அசாம் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அசாம் மாநிலத்தின் கவுகாத்தி பகுதியில் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் பிற மாநிலங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : குறைந்த கால அளவீடு கொண்ட எஃப்டி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

எந்த எந்த பகுதிகளில் வங்கிகள் செயல்படும்?

அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பெலாப்பூர், பங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல செயல்படும். இதேபோல சென்னை, டேராடூன், கேங்டாக், ஹைதராபாத், இம்பால், இட்டாநகர், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும். மேலும், ஜம்மு கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகளும் வழக்கம் போல இயங்கும். இது தவிர பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், விஜயவாடா பகுதிகளில் உள்ள வங்கிகளும் வழக்கம் போல செயல்படும்.

இதையும் படிங்க : ஏடிஎம் பண பரிவர்த்தனை.. கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?.. ஆர்பிஐ கூறும் முக்கிய விதிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.