விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும் - விஷால்
Top Tamil News August 26, 2025 06:48 AM

விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும் என விஷால் புகழாரம் சூட்டியுள்ளார்.


உதகையில் நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாடு நடத்தியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள். நல்லது பண்றதுதான் அரசியல்னா, எப்பவோ நான் அரசியலுக்கு வந்துட்டேன். அரசியல் கொடிகளில் பல நிறங்கள் தான் தெரிகிறது. நிறைய கொடிகளை பார்க்கும்போது, கலர்ஃபுல்லா வேடிக்கை இருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார்.


முன்னதாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மகுடம் படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின்  உருவப்படத்திற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர்  விஷால்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.