லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சாந்தி நகர் பகுதியில் புதிய மின்மாற்றிணை சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதியில் பல ஆண்டுகளாக இரவு நேரங்களில் மின்வெட்டுகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தன. இதனை கருத்தில் கொண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், தொடர்ந்து மின் துறை உயர் அதிகாரிகளை நாடி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டு தொகுதி முழுவதும் மின்வெட்டுகளை தடுக்கும் வகையில் மின்துறை அதிகாரிகளுடன் செயல்பட்டு பல்வேறு இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் 19 லட்சம் மதிப்பீட்டில் 315KV புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன், செயற்பொறியாளர் ஸ்ரீதரன், உதவி பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் பவித்ரன், மற்றும் மின்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள், பெண்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்...