கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகா சிக்கலகி கிராமத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாலிங்கராயன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், தெய்வ சிம்மாசனத்தில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய், பக்தியின் அடையாளமாக ரூ.5,71,001க்கு ஏலத்தில் விற்பனையானது பெரும் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தேங்காயின் ஏலத்தில் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மகாவீர் ஹரகே உள்ளிட்ட மூவருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மகாவீரே அதனை வென்றார்.
மகாவீர் ஹரகே, “இது கடவுள் மாலிங்கராயன் மீது கொண்டுள்ள எங்கள் நம்பிக்கையின் குறியீடு. ஆண்டுதோறும் நாங்கள் செழித்து வருவதற்கு அவர்தான் காரணம். அதற்கான நன்றியை செலுத்தும் வகையில் இந்த தேங்காயை வாங்கினேன்” என பக்தி உணர்வுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவேவும் இவர் ரூ.6.5 லட்சம் செலுத்தி ஒரு தேங்காயை ஏலத்தில் எடுத்த அனுபவம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மாலிங்கராயன் திருவிழாவில் தெய்வம் மற்றும் சிம்மாசனத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் பாரம்பரியமாக ஏலமாக வைக்கப்படுவது வழக்கம். . இந்த சம்பவம், பக்தர்களின் ஆன்மீக உற்சாகத்தையும், பாரம்பரிய மதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.