பொதுவாக மருத்துவ குணத்தை வைத்துதான் நம் முன்னோர்கள் நமது உணவு முறையை வடிவமைத்துள்ளனர் .அந்த வகையில் சீரகம் செரிமான ஆற்றல் கொடுக்கும் என்பதால் ரசம் வைக்க பயன் படுத்துகிறோம் .அதே போல கசகசாவை உணவில் சேர்த்து கொண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.கசகசா விதைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது ,
2.கசகசாவில் உள்ள இரும்பு சத்து இயற்கையான இரத்த சுத்திகரிப்பானாகசெயல் படுகிறது
3. அடுத்து இந்த கசகசா இரத்தத்தில் இரத்த சிவப்பணு மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
4..கசகசாவை உணவில் சேர்த்து கொண்டால் மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் .
5.கசகசாவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்
6.கசகசாவை உணவில் சேர்த்து கொண்டால் நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
7.கசகசா விதைகளை உணவில் சேர்த்து கொண்டால் தூக்கத்தை தூண்டும்.
8.கசகசாவை உணவில் சேர்த்து கொண்டால் மன அழுத்த நிலைகளைக் குறைக்க உதவுகிறது.
9.தூக்கமின்மை பிரட்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் தேநீர் வடிவில் கசகசாவை உணவில் சேர்த்து கொள்ளலாம்