Soori : சூரியின் அதிரடி ட்ரான்ஸ்பர்மேஷன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
TV9 Tamil News August 26, 2025 09:48 AM

நடிகர் சூரி (Soori) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். மேலும் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான விடுதலை  (Viduthalai Part 1) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். நடிகர் சூரிக்கு இந்த படமான மிக பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து கருடன் (Garudan) என்ற படத்திலும் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் நடிகர் சசிகுமார் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமும் சூரிக்கு சினிமாவில் மேலும் ஹீரோவாக வரவேற்பை கொடுத்திருந்தது. அதை தொடர்ந்து இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் (Maaman) என்ற படம் வெளியானது.

இந்த படமும் சூரிக்கு சூப்பர் ஹிட் படமாக மைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.  நல்ல உடலமைப்புடன் சூரி இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் :

#Soori looks 🥶🔥🤯 pic.twitter.com/QRAupZDB77

— Movie MentorX (@MovieMentorX)

நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மாமன். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தார். இந்த மாமன் படமானது கடந்த 2025, ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது சூரியின் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேமிலி என்டேர்டைனர் கதைக்களத்துடன் வெளியான இப்படம் தற்போது ஜீ5 ஓடிடியிலும் உள்ளது.

இதையும் படிங்க : ஆக்ஷன் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் – வெளியானது தண்டகாரண்யம் பட டீசர்!

நடிகர் சூரியின் புதிய திரைப்படம் :

நடிகர் சூரி மாமன் படத்தை தொடர்ந்து , வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் மண்டாடி என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. இதில் தமிழில் சூரி ஹீரோவாக நடிக்க, நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சூரி வில்லனாகவும், சுஹாஸ் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். இப்படமானது இரு பரிமாணங்களில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது இரு மொழி திரைப்படமாக உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, அவருடன் நடிகர்கள் சத்யராஜ், சச்சனா, ரவிந்தரா விஜய் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படமானது படகு போட்டி சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எனக் கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆனது கோடைக்காலத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.