திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு வயது குழந்தை மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை குகஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த வண்டை எடுத்து விழுங்கியுள்ளார். அந்த வண்டு, குழந்தையின் மூச்சுக்குழாயை கடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டட்டுள்ளது.
இதைபார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.