2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) அணிகள் மோதவிருக்கும் போட்டி எப்போது நடைபெறும் என ரசிகர்கள ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. வழக்கம்போல், இந்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், சூப்பர்-4 சுற்றிலும் ரசிகர்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலையும் காணலாம். ஆனால் இந்த போட்டிக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பயப்படும் ஒரு விஷயம் உள்ளது. இதற்குக் காரணம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தனது அதிரடி பேட்டிங் மற்றும் 360 டிகிரி ஷாட்டுகளுக்கு உலகம் முழுவதும் பிரபலமானவர். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முக்கிய போட்டிகளைப் பொறுத்தவரை, சூர்யகுமாரின் பேட் சற்று அமைதியாகத் தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யாவின் செயல்திறன்:நீண்ட காலமாக டி20 போட்டிகளில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக இருந்த சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 5 போட்டிகளில், ஹாரிஸ் ரவூப், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா போன்ற பந்து வீச்சாளர்கள் அடங்கிய பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுப் பிரிவை சூர்யகுமார் எதிர்கொண்டார். குறிப்பாக ஹாரிஸ் ரவூப், சூர்யகுமார் யாதவை பல முறை தொந்தரவு செய்துள்ளது.
ALSO READ: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!
ஹாரிஸ் ரவூப் எதிராக சொதப்பல்:Suryakumar Yadav is yet to make a big mark in T20Is against Pakistan 👀#AsiaCup2025 #INDvsPAK #SuryakumarYadav #T20Is #CricketTwitter pic.twitter.com/SuC2BLtklF
— InsideSport (@InsideSportIND)
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பை எதிர்த்து சூர்யகுமார் யாதவ் எப்போதும் சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில், ரவூப் சூர்யகுமாரை யாதவை அவுட் செய்துள்ளார். அவரது வேகம், துல்லியமான லைன்-லெந்த் மற்றும் யார்க்கர் ஆகியவை சூர்யகுமாரை சிக்கலில் சிக்க வைத்துள்ளன. கடினமான சூழ்நிலைகளில் சூர்யகுமார் யாதவ் சர்வதேச போட்டிகளில் பல முறை கலக்கி இருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது குறைந்த ரன் விகிதம் கவலைக்குரியதாக உள்ளது. ஆனால் இந்த முறையும் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள்.
ALSO READ:திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா..?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் செயல்திறன்:ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் கூட சூர்யகுமார் யாதவ் இதுவரை விளையாடியது இல்லை. சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமாரின் ஒட்டுமொத்த செயல்திறன் சிறப்பாக உள்ளது. இதுவரை 83 சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் 38.20 சராசரி மற்றும் 167.07 ஸ்ட்ரைக் ரேட் 4 சதங்களும் 21 அரைசதங்களுடன் 2598 ரன்கள் எடுத்துள்ளார்.