ஏ சி அறையில் ஆரோக்கியமாய் இருக்க இதையெல்லாம் செய்யுங்க
Top Tamil News August 28, 2025 06:48 AM

பொதுவாக இப்போது  பெரும்பாலான வீடுகளில் ஏசி உள்ளது .இதனால் சிறு குழந்தை கூட ஏ சி காற்றுக்கு அடிமையாகி விட்டது .அப்படி ஏசியில் குழந்தை தூங்கும்போது அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று இந்த ப்பதிவில் பார்ப்போம் 

1.பொதுவாக குளிர் சாதன அறை 25 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருப்பது நல்லது, 
2.மேலும் வெளிப்புற வெப்பத்தை பொறுத்து ஏசியின் வெப்பநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளவேண்டும்.
3.மேலும் ஏசி  அறையை குளிர்விப்பது மட்டுமல்லாமல்,  உங்கள் குழந்தையின் தோலின் ஈரப்பதத்தை குறைக்கிறது .
4.அதனால் ஏசி அறையில் குழந்தையின் ஆடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
5.ஏசி அறையில் குழந்தைக்கு உடல் முழுவதும் பரவிய ஆடையை அணிவித்து விடுங்கள். 
6.ஏசி அறையில் தூங்கும் குழந்தைக்கு கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். 
7.அல்லது ஏசி அறையில் குழந்தைக்கு  முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.
8.எனவே, உங்கள் குழந்தையின் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க குறிப்பிட்ட இடைவெளியில் சருமத்தை மாய்சரைசிங் செய்வது அவசியம்.
9.ஏசி இருக்கும் அறையில் ஒரு கிண்ணம் தண்ணீரை வைத்துக் கொள்ளலாம். இது காற்றில் உள்ள வறட்சியை சமப்படுத்த உதவும்.
10. உங்கள் ஏசியை தொடர்ந்து சர்வீஸ் செய்வது மிகவும் அவசியம்.தூசியால் அலர்ஜி உண்டாகலாம் 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.