பொதுவாக நாம் அந்த கசப்பு பொருட்களை ஒதுக்கி விடுகிறோம் .இந்த கசப்பு மிகுந்த பாகற்காய் மட்டுமல்ல இலைகூட மருத்துவத் தன்மை உடையதே! அந்த பாகற்காய் இலையின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு அவுன்ஸ் பாகல் இலையை இடித்து அதன் சாறு எடுத்து கொள்ளுங்கள்
2.இந்த பாகல் சாறுடன் வறுத்துப் பொடித்த சீரகத் தூளை கலந்து கொள்ளுங்கள்
3.இந்த பாகல் ஜூஸ் ,சீரக கலவையை காலை, மாலை உட்கொண்டால் விஷக்காய்ச்சல் ஓடியே போகும்.
4.அடுத்து சிலருக்கு சிரங்கு இருக்கும் .இந்த பாகல் இலைச்சாற்றுடன் காசிக்கட்டியை இழைத்து சிரங்கின் மேல் பற்று போல போட்டு வந்தால் சிரங்கு உதிர்ந்துவிடும்.
5.மேற்சொன்ன கலவையால் நம் உடலில் ரத்தம் சுத்தமாகும்.
6.சிலருக்கு காலரா படுத்தி எடுக்கும் .அவர்கள் பாகல் இலைச்சாறு ஒரு அவுன்சும், ½ அவுன்ஸ் நல்லெண்ணெயும் கலந்து அருந்தினால் காலரா கட்டுப்படும்.
7.சிலருக்கு லிவர் பிரச்சினையிருக்கும் .பாகல் இலைச்சாறை கொதிக்க வைத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்தலாம்.
8.அடுத்து பாகல் இலைச்சாறுடன் சம அளவு பசுமோர் கலந்து கொள்ளவும்
9.இந்த பாகல் இலை மோர் கலவையை மூன்று நாட்கள் காலையில் தொடர்ந்து சாப்பிட காசநோய்கூட குணமாகி விடும்