தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டப்போ எங்க போனீங்க ஸ்டாலின்? - பிரசாத் கிஷோர் தாக்கு!
Webdunia Tamil August 28, 2025 07:48 PM

நேற்று வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணி பீகாரில் நடைபெற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டது குறித்து பிரசாத் கிஷோர் விமர்சித்துள்ளார்.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் நேற்று தோழமை கட்சிகளுடன் வாக்கு திருட்டிற்கு எதிரான பேரணியை நடத்தியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பீகார் மற்றும் பீகார் மக்களின் பெருமை குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணத்தை அரசியல் வியூகியும், ஜனசுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. அப்போது ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. அவர் மட்டுமல்ல காங்கிரஸும் பீகாரை இழிவுப்படுத்துபவர்களை முன்னிறுத்துகிறது. ‘கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது’ என ரேவந்த் ரெட்டி பேசினார். ஆனால் அவரை காங்கிரஸ் கௌரவிக்கிறது” என விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.