AI தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் இளைஞர்கள்! எதிர்காலம் கேள்விக்குறி?
Webdunia Tamil August 28, 2025 07:48 PM

நாளுக்கு நாள் ஏஐ அசுரகதியில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வணிகம், தொழில்நுட்பம், கல்வி என பல துறைகளிலும் ஏஐ ஆட்டோமேஷன் நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தினம் தினம் ஐடி நிறுவனங்களில் வேலையிழப்புகள் செய்தியாக வந்துக் கொண்டே இருக்கிறது. இது ஐடி துறை மட்டுமல்லாமல் மீடியா, பொழுதுபோக்கு துறைகளிலும் பெரும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள துறைகளில் 22-25 வயது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் 13 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மென்பொருள் துறையில் மட்டும் 2022ம் ஆண்டு முதலாக தொடக்க நிலை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புகள் 20 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தொடக்க நிலை வேலைகள் பெரும்பாலும் கல்லூரி முடித்த இளைஞர்கள் வந்தமரும் பணி என்ற வகையில் எதிர்காலத்தில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.