இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வழிபடுவது துவங்கி விநாயகர் ஊர்வலம், சிலை கரைப்பது வரையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது, வழிபடுவது துவங்கி கடலில் சிலைகளைக் கரைப்பது வரையிலான விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?