கூடுவாஞ்சேரி மற்றும் பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார்.
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மாலை முதலே மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் அரசு பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் கார்கள் தென் மாவட்டத்தை நோக்கி செல்வதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது போக்குவரத்து இந்த போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் சிக்கி தவிக்கின்றனர்.
இதேபோல்கோயம்பேடு மார்க்கெட் சாலையில் நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிகோயம்பேடு மார்க்கெட் சாலையில் நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல். ஆகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.