நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது இதைவிட கூட்டம் அதிகமாக கூடியது, ஆனால் பின்னாட்களில் சிரஞ்சீவி தன் கட்சியை கலைக்கும் நிலை ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, “அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை. 53 ஆண்டுகள் பொன்விழா கண்டு 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் தலைவர் இபிஎஸ், தமிழகத்தின் முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்தவர். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டம் கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார். நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது இதைவிட கூட்டம் அதிகமாக கூடியது, ஆனால் பின்னாட்களில் சிரஞ்சீவி தன் கட்சியை கலைக்கும் நிலை ஏற்பட்டது. 2026 ஆம் ஆண்டு இபிஎஸ் முதலமைச்சராதை யாராலும் தடுக்க முடியாது. இபிஎஸ் யார் என்றே தெரியாது என்ற நடிகர் விஜய் அரசியலில் என்ன செய்துவிட முடியும்? எம்ஜிஆர் அதிமுகவான எங்களுக்கு மட்டுமே சொந்தம். தன்னை சிங்கம் எனக் கூறும் விஜய் எடப்பாடி பழனிச்சாமி பற்றிப் பேச தகுதியற்றவர்” என்றார்.