தங்களது திருமண நாளையொட்டி, குடும்பத்துடன் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி, மகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். அவருடன் ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் கொல்லு ரவீந்திர, சித்தூர் எம்எல்ஏ ஜெகன்மோகன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அன்புமணிக்கு அமைச்சர் கொல்லு ரவிந்திரா பெருமாள் சிலையை நினைவு பரிசாக வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.