அம்மா இறந்துட்டாங்க..! “வாட்டி வதைத்த வறுமை”.. தந்தையின் பிணத்துடன் 3 நாட்களாக இருந்த மகன்கள்… வீடு முழுவதும் துர்நாற்றம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!
SeithiSolai Tamil August 30, 2025 04:48 AM

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவுதன்வா நகரின் ராஜேந்திரநகர் பகுதியில், வறுமையின் கொடூரத்தை வெளிப்படுத்தும் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வளையல் விற்பனையாளராக வாழ்ந்த 50 வயது லவ் குமார் பட்வா, உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் உயிரிழந்தார்.

அவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், அவரது மகன்களான ராஜ்வீர் (14) மற்றும் தேவராஜ் (10) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இவரது மகள் அருகிலுள்ள பகுதியில் பாட்டியுடன் வசித்து வருகிறார். இறுதிச் சடங்கிற்கு பணமின்றி, இந்த இரு சிறுவர்களும் தந்தையின் உடலுடன் மூன்று நாட்கள் வீட்டில் தனியாக இருந்தனர்.

உறவினர்களோ, அயலவர்களோ உதவாத நிலையில், தந்தையின் உடல் அழுகத் தொடங்கியதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மதியம், சிறுவர்கள் உடலை ஒரு வண்டியில் வைத்து தாண்டா ஆற்றில் மூழ்கடிக்க முயன்றனர்.

இதைக் கண்ட உள்ளூர் கவுன்சிலர் வேட்பாளர் ரஷீத் குரேஷி மற்றும் அவரது மூத்த சகோதரர் வாரிஸ் குரேஷி ஆகியோர் உடனடியாக தலையிட்டு, உடலை வாகனத்தில் எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை மரியாதையுடன் செய்து முடித்தனர்.இந்த சம்பவம், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு சமூகத்தின் ஆதரவு இல்லாத நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.