ஓய்வு பெறும் மறுநாளே புதிய பொறுப்பு.. சங்கர் ஜிவால் IPS-க்கு என்ன பதவி?
WEBDUNIA TAMIL August 30, 2025 06:48 AM

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ், நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்காகவும், கட்டிடங்களுக்கான தீயணைப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளை முறைப்படுத்தவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் தலைவராக, சட்டம்-ஒழுங்கு துறையில் தனது அனுபவங்களை சிறப்பாக பயன்படுத்த சங்கர் ஜிவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு காவல்துறை மற்றும் அரசு வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.