நான் மக்களில் ஒருவன், சாதாரணத் தொண்டன் - 40 நாட்களில் 118 தொகுதிகளில், 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சிப் பயணம் 24 மாவட்டங்களில், 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. 118 தொகுதிகளில் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன், 6728 கி.மீ பயணித்துள்ளேன். இந்தப் பணயத்தில் கிடைக்கும் பேராதரவை பார்த்து பொம்மை முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போல என்னை நினைத்துக்கொண்டு பேசுவதாக அவர் கூறியிருக்கிறார். நான் மக்களில் ஒருவன், சாதாரண தொண்டன். முன்கள வீரனாக எமது எழுச்சிப் பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.