“இது தான் புத்திசாலி குழந்தை” நொடியில் தன்னையும்…. மற்றொரு சிறுவனையும் காப்பாற்றிய சிறுமி… வைரலாகும் வீடியோ,,!!
SeithiSolai Tamil August 30, 2025 01:48 PM

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, குழந்தைகள் வெறும் சுட்டித்தனமாக மட்டும் செயல்படாமல், சில சமயங்களில் சிந்தித்து புத்திசாலித்தனமாகவும் செயல்படுவார்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தக் காணொளியில், ஒரு விளையாட்டுத் திடலில் மூன்று ஸ்லைடுகள் உள்ளன. அதில் ஒரு சிறுமி முதல் ஸ்லைடில் இருந்து சறுக்கிக் கீழே வருகிறாள். அதே நேரத்தில், அதே ஸ்லைடில் கீழிருந்து ஒரு சிறுவன் மேலே ஏறுகிறான்.

இதைப் பார்த்த சிறுமி, மிகவும் சாமர்த்தியமாக, பாதி வழியிலேயே இரண்டாவது ஸ்லைடுக்கு மாறிவிடுகிறாள். இந்த சிறுமியின் துரிதமான மற்றும் புத்திசாலித்தனமான செயலால், சிறுவன் மீது மோதி காயம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் சிறுமியின் செயலை பாராட்டி, சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Wander Joy (@itschina.baby)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.