ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஜப்பான் இடையேயான ஆண்டு சந்திப்பாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் இஷிபா வரவேற்றார். நேற்று ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி இன்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் இஷிபாவுடன் பயணித்து வருகிறார். ஜப்பான் புல்லட் ரயிலில் இருவரும் பயணித்தனர். பிறகு டோக்கியோ எலெக்ட்ரான் ஆலையை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டபோது “பிரதமர் இஷிபாவும் நானும் டோக்கியோ எலக்ட்ரான் தொழிற்சாலையைப் பார்வையிட்டோம். பயிற்சி அறை, உற்பத்தி கண்டுபிடிப்பு ஆய்வகம் ஆகியவற்றிற்குச் சென்று நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். குறைக்கடத்தித் துறை (செமிகண்டக்டர்) இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்புக்கு ஒரு முக்கிய பகுதியாகும்.
கடந்த சில ஆண்டுகளில், இந்தத் துறையில் இந்தியா பல முன்னேற்றங்களைச் செய்துள்ளது. ஏராளமான இளைஞர்களும் இதில் இணைந்துள்ளனர். வரும் காலங்களிலும் இந்த உந்துதலைத் தொடர நாங்கள் முயல்கிறோம்” என கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியா மீது அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த ஜப்பான் பயணம், இதில் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K