இப்பவும் விஜயகாந்துதான் வின்னர்!.. கூலி படத்தை காலி செய்த கேப்டன் பிரபாகரன்!..
CineReporters Tamil August 31, 2025 03:48 AM

Captain Prabakaran: ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது புதுமுக நடிகராக வந்தவர்தான் விஜயகாந்த். துவக்கத்தில் இவருக்கு வெற்றி படங்கள் அமையவில்லை. சட்டம் ஒரு இருட்டறை அவருக்கு கை கொடுத்தது. அதன்பின் இரண்டு படங்கள் பிளாப்.. அதன்பின் ஒரு படம் ஓடியது.. அதன் பின் 4 படங்கள் ஓடவில்லை. இப்படித்தான் சினிமாவில் முன்னேறினார் விஜயகாந்த்.

Angry Young Man என சொல்லப்படும் கோபமான இளைஞன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்தார் விஜயகாந்த். அதுதான் அவருக்கு செட் ஆனது. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்களின் வெற்றி விஜயகாந்தை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு டஃப் கொடுக்கும் நடிகராக விஜயகாந்த் மாறினார். அவரின் சில படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை செய்து காட்டி இருக்கிறது.

விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படத்தை பார்த்து அப்படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமாரை அழைத்து தனக்கும் இது போல ஒரு கிராமத்து பின்னணியில் ஒரு கதை எழுதுங்கள் என கேட்டார் ரஜினி. அப்படி உருவான படம்தான் எஜமான். ஆனால் சின்ன கவுண்டரில் இருந்த நேர்த்தி எஜமானில் இருக்காது. சின்ன கவுண்டர் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு எஜமான் கவரவில்லை என்பதே நிஜம்.

C சென்டர் என சொல்லப்படும் கிராமத்து புறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம். இது ரஜினிக்கும் தெரியும். பல படங்களில் ரஜினியை விட அதிக வசூலை பெற்ற விஜயகாந்த் தற்போது மறைந்த பின்னரும் தான் வசூல் சக்கரவர்த்தி என காட்டியிருக்கிறார். விஜயகாந்தின் நூறாவது படமாக 34 வருடங்களுக்கு முன்பு வெளியான கேப்டன் பிரபாகரன் கடந்த 22 ஆம் தேதி தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாளும் வசூல் ஏறிக்கொண்டே போகிறது.

#image_title

ஒருபக்கம் கடந்த 14ஆம் தேதி வெளியான கூலி படமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. போன வாரம் செவ்வாய் கிழமை முதலே கூலி படத்தின் வசூல் குறைந்து கொண்டே வந்தது. கடந்த 5 நாட்களில் கூலி படம் தமிழ்நாட்டில் 6 கோடியை வசூல் செய்திருக்கும் நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் கிட்டத்தட்ட 12 கோடியை வசூல் செய்திருக்கிறது. படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் கிட்டத்தட்ட 15 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் இப்போதும் தான் ஒரு வசூல் மன்னன் என காட்டி இருக்கிறார் விஜயகாந்த்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.