தேவையான பொருட்கள்:-
* பெரிய உருளைக்கிழங்கு
* கோதுமை மாவு
* ரவை
* உப்பு
* தண்ணீர்
* இஞ்சி
* சில்லி ப்ளேக்ஸ்
* எலுமிச்சை சாறு
* கொத்தமல்லி
* கறிவேப்பிலை
* மஞ்சள் தூள்
* சீரகம்
* எண்ணெய்
செய்முறை:-
* உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு, துருவி, அத்துடன் கோதுமை மாவு, ரவை, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, சில்லி ப்ளேக்ஸ், எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கலந்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஊறிய பின்பு அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சூடானதும் அதில் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் வார்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு ரவா தோசை தயார்.