அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடயே ஏற்பட்டிருக்கும் மோதல் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து மனம் திறக்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சரான, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2026 ஆம் வருட தேர்தலுக்கு முன்பாக அதிமுக மீண்டும் பிஜேபியுடன் கூட்டணி அமைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மற்றும் எம்எல்ஏ மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
தற்போது அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்ட காலமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையனிடயே நிலவி வந்த பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்திருப்பதால் அவர் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழா மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாதது குறித்து எதிர்ப்பு குரல் எழுப்பியவர் செங்கோட்டையன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற யாத்திரையை தொடங்கிய போதும் செங்கோட்டையன் அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின்போது தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசயிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைவாரா.? அல்லது ஆளும் கட்சியில் இணைவாரா.? என்று பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "கொஞ்சம் கீழ இருக்கீங்களா.." கட்டளையிட்ட இ.பி.எஸ்.!! கடுப்பான ஆர்.பி உதயகுமார்.!! அதிமுகவில் கோஷ்டி மோதல்.?
இதையும் படிங்க: "பொருந்தா கூட்டணி..." பாஜக ஆட்களை ஒதுக்கிய இ.பி.எஸ்.!! மீண்டும் கூட்டணியில் சிக்கல்.?