இந்தியா மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பிற்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, EFTA கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் ₹8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளன.
இந்த முதலீடுகளின் விளைவாக, இந்தியாவில் சுமார் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும். சுங்க வரிகள் குறைக்கப்படுவதுடன், வர்த்தக நடைமுறைகளும் எளிதாக்கப்படும். குறிப்பாக, உயர்தர சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான சுங்க வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம், "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" மற்றும் "தற்சார்பு இந்தியா" போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
Edited by Mahendran